Monday, August 29, 2011

2012 நிகழ்வுகள்:: 2012 phenomenon


2012 நிகழ்வுகள் உலகின் பேரழிவு அல்லது பெரும் மாற்றம் 2012ஆம் ஆண்டில் நிகழலாம் என நிலவும் நம்பிக்கைகளையும் கருத்துக்களையும் குறிக்கிறது.இந்த சோதிடங்கள் முதன்மையாக மாயா நாட்காட்டியில் 5,125 ஆண்டுகள் கழித்து திசம்பர் 21 அல்லது 23,2012ஆம் ஆண்டில் முடிவதைக் கொண்டு எழுந்துள்ளன.மெக்சிகோ பகுதியில் வாழ்ந்திருந்த மாயா நாகரீகத்தில் உலகம் துவங்கியதாக அவர்கள் கருதிய நாளிலிருந்து தொடர்ந்த நாட்காட்டி முறை(Long Count calendar) கடைபிடிக்கப்பட்டது. இதனைக் கொண்டு தொன்மவியல் வானிலையாளர்கள்,மத பொழிப்புரையாளர்கள், எண்கணிதவியலாளர்கள் மற்றும் புறப்புவி ஆய்வாளர்கள் என ஒவ்வொருவரும் ஒரு நம்பிக்கை அல்லது கருத்தை பரப்பி வருகின்றனர்.
புதிய காலம் விரிவுரையாளர்கள் பேரழிவு ஏற்படும் என்பதை மறுத்து அந்த நாளில் நேர்மறையான மாற்றம் நிகழலாம் எனவும் 2012 புதிய சகாப்தத்தின் துவக்கம் என்றும் கொள்கை வகுக்கின்றனர்.இத்தகைய எண்ணங்களும் கருத்துக்களும் பல புத்தகங்கள்,தொலைக்காட்சி விவரணப்படங்கள்,இணைய தளங்கள் மூலம் உலகெங்கும் பரவியுள்ளது.
மாயா ஆராய்ச்சியாளர்கள் மாயா நாட்காட்டி 2012இல் முடிகிறது என்பது மாயா வரலாற்றை தவறாக கணிக்கிறது என்று வாதிக்கிறார்கள். இன்றைய மாயாவினருக்கு, 2012 முற்றிலும் தொடர்பில்லாதது, பழைமைவாதிகளுக்கு இதனைக் குறித்த மூல செய்திகளோ கிடைப்பதில்லை அல்லது முரண்பட்டுள்ளது.இதனால் அவர்களிடையே இந்த நாளைக்குறித்த ஓர் பரவலான இணக்கமான புரிதல் இல்லை. 2012ஆம் ஆண்டு உலகின் பேரழிவுக்கான காரணங்களாக பகுதி அறிவியலாளர்கள் கூற்றுக்களை (கருங்குழி ஒருங்கிணைப்பு,தடுமாறும் கிரகமொன்று புவி மீது மோதல்,துருவங்கள் மாற்றங்கள்,சூரியனின் தீப்பிழம்புகள்) அறிவியல் வல்லுனர்கள் மறுத்துள்ளனர்.பெரும்பாலானவை அடிப்படை இயல்பியல் விதிகளுக்குப் புறம்பானவை.

நாசா என்ன சொல்கிறது

2012 நிகழ்வு பற்றி (அமெரிக்க) தேசிய வானூர்தியியல், விண்வெளி நிருவாகம் தன் இணைமதளங்களில் தெளிவாக விளக்கியுள்ளது. அவற்றின் சாரம் என்னவெனில், இந்த பீதி அறிவுபூர்வமானதும் அல்ல அறிவியல் பூர்வமானதும் அல்ல என்பதே!


நிபிரு
 பீதி பற்றி நாசாவின் கருத்து

நிபிரு என்ற மிகப்பெரிய விண்பொருள் (கோள் என்றும் சொல்பவர் உண்டு) பூமியை நோக்கி நேராக வரப்போவதாகக் கூறும் (கற்பனைக்கதை எழுத்தாளர்) செக்காரியா செட்சினின் கருத்திலிருந்து துவங்கியதுதான் இந்த நிபிரு பீதி என்று கூறலாம்.  அவர் தன் கருத்திற்கு ஆதாரமாக வைப்பது, சுமேரியர்களின் புராதன ஆவணங்களில் கூறப்பட்டுள்ளதாக அவர் கூறும் விடயங்களைத்தான். அவற்றில் நிபிரு என்ற கோள் உள்ளதாகவும் அது 3600 ஆண்டுகளுக்கு ஒரு முறை சூரியனைச் சுற்றி வரும் எனவும் கூறப்பட்டுள்ளது என்கிறார் இவர். அனுண்ணகி என்றழைக்கப்படும் வேற்றுக்கோள் வாசிகள் பூமிக்கு வந்தனர் என்றும் அவர்கள் கூற்றுப்படியே நிபிருவின் வருகை எதிர்பார்க்கப்படுகிறது என்றும் கூறப்படுகிறது; நிபிரு பீதியைக் கிளப்புபவர்கள் முன்னரே ஒரு தேதியைக் குறித்திருந்தனர் -- அதாவது மே 2003 -- அத்தேதியும் வந்து சென்று விட்டது; எனவே இப்போது தேதியை சற்று முன்னர் தள்ளிப்போட்டுள்ளனர் இவர்கள்!


மாயா இனமக்களின் நாட்காட்டி டிசம்பர் 21, 2012 அன்று முடிவுறுவது குறித்து?

உண்மையில், மாயா நாட்காட்டி குறிப்பிடப்பட்ட தேதியான டிசம்பர் 21, 2012 அன்று முடிவடைவதில்லை; டிசம்பர் 31 அன்று நாம் பயன்படுத்தும் நாட்காட்டி முடிவடைந்தது என்று கூற முடியுமா! மீண்டும் ஒரு வருட நாட்காட்டியை நாம் தொடர்ந்து பயன்படுத்துவது இல்லையா? அதேபோல் தான் இந்த மாயா நாட்காட்டியும். இதன் தற்போதைய நீள்-எண்ணம் (long count) முடிவுற்றாலும் மறு தினமே மீண்டும் ஒரு புதிய தொடர்ந்த (நீள்-எண்ண) நாட்காட்டி துவங்கும்.

Monday, August 22, 2011

ரசிக்க,திருவனந்தபுரம் :: thiruvananthapuram best place for tourism in tamil


கடவுளின் சொந்த நாடு என வர்ணிக்கப்படும் கேரளத்தின் தலைநகரம் திருவானந்தபுரம்தான் பத்மநாபசுவாமி (விஷ்ணு) அனந்த சயனத்தில் இங்கு அருள்பாலித்துக் கொண்டிருப்பதால் இந்த ஊர் திருவ(அ)னந்தபுரம் என அழைக்கப்படுவதாக புராணங்கள் கூறுகின்றன.. திருவனந்தபுரத்தில் தரிசிக்கவும், ரசித்து மகிழவும் நிறைய இடங்கள் உள்ளன.

பத்மநாபசுவாமி கோவில்:

அரபிக்கடலோரம்... அந்த அரபிக்கடலை மேற்குப் பகுதியாகவும், தமிழ்நாட்டை கிழக்குப் பகுதியாகவும் கொண்ட நிலப்பகுதிதான் திருவனந்தபுரம். ஏழு சிறிய குன்றுகளின் மீது எழுந்து நிற்கும் அழகான நகரம். 1750ம் ஆண்டு வாக்கில் திருவாங்கூர் சமஸ்தானத்தின் தலைநகரமாக அறிவிக்கப்பட்ட திருவனந்தபுரம் நாட்டின் விடுதலைக்கு பிறகு மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பிறகும் கூட தலைநகரமாக தொடருவது சிறப்பாகும்.

இங்குள்ள அருள்மிகு பத்மநாபசுவாமி கோவில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்தக் கோவிலை 1733ம் ஆண்டில் திருவாங்கூர் மகாராஜா மார்த்தாண்ட வர்மாசீரமைத்தார். கேரளாவின் பாரம்பரிய கட்டிடக் கலைக்கு எடுத்துக்காட்டாகவும் இந்தக் கோவில் விளங்கி வருகிறது. இங்குள்ள சிற்பங்கள், கல்வெட்டுக்கள் போன்றவை நம் முன்னோர்களின் திறமையை இன்றளவும் முரசடித்து வருகின்றன. தரிசிக்க மட்டுமின்றி பார்த்து பரசவப்படவும் வைக்கிறது திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவில்.

ஆற்றுக்கால் பகவதி அம்மன்கோவில்:

பெண்களின் சபரிமலை என்றழைக்கப்படும் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலில் இருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் உள்ளது. பல பகுதிகளில் இருந்தும் பெண்கள் அதிகளவில் வந்து பொங்கலிட்டு வழிபடுகிறார்கள். அந்த வகையில் ஆண்டுதோறும் சுமார் 17 லட்சம் பக்தர்கள் இங்கு வந்து செல்வதாக கணக்கிடப்பட்டு உள்ளது.
பொன்முடி:

திருவனந்தபுரத்தில் இருந்து சுமார் 60 கி.மீ தொலைவில் அமைந்துள்ள குளுகுளு மலைப்பகுதிதான் பொன்முடி. நம்ம ஊர் ஊட்டி போல இங்கு எப்போதும் ஜிலுஜிலு குளுகுளு காற்றுதான். கடல் மட்டத்தில் இருந்து சுமார் 915 மீட்டர்கள் உயரத்தில் அமைந்துள்ள பொன்முடி மலைப்பகுதியில் அரியவகை மலர்களையும், படபடத்துச் செல்லும் விதவிதமான வண்ணத்துப் பூச்சி ரகங்களையும் கண்டு களிக்கலாம். பச்சைப் பசேல் தேயிலைத்தோட்டங்களை தழுவிச் செல்லும் மேகக்கூட்டங்கள் நம் உடலை மட்டுமல்ல கண்களையும் குளுமையாக்கும். இங்கு சுமார் 3 கி.மீ தொலைவில் மான்பூங்கா ஒன்றும் உள்ளது.

பொன்முடியில் இருந்து சிறிது தொலைவில் அழகான அருவி ஒன்றும் விழுந்து கொண்டிருக்கிறது. இங்கு அகஸ்தியர் கோவில் ஒன்றும் உள்ளது. பவுர்ணமி நாட்களில் இங்கு ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.

நெய்யாறு அணை:

அழகு சிந்தும் பிக்னிக் ஸ்பாட்டாக விளங்கும் நெய்யாறு அணை, திருவனந்தபுரத்தில் இருந்து சமார் 30 கி.மீ தொலைவில் உள்ளது. இது கேரளாவின் கள்ளிக்காடு புலிகள் சரணாலயப் பகுதி மற்றும் தமிழகத்தின் முண்டன்துறை வனவிலங்கு சரணாலயப் பகுதியின் விரிவாக்கப் பகுதியில் அமைந்துள்ளது. அணையில் படகு சவாரி உண்டு. முதலைப்பண்ணை ஒன்றும் இருக்கிறது.

கோவளம் பீச்:

இந்தியாவின் பிரபலமான கடற்கரைகளில் ஒன்றான கோவளம் பீச், திருவனந்தபுரத்தில் இருந்து 16 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. அசைந்தாடும் தென்னை மரக்கூட்டங்கள், அழகான அரபிக்கடல் ஆகியவற்றை ரசித்துக் கொண்டு கடற்கரையில்... வெண்மணலில் கால்பதித்து நடைபோடுவதே தனிசுகம்தான். இதனாலேயே கோவளத்துக்கு மீண்டும் மீண்டும் வரும் சுற்றுலா பயணிகள் ஏராளம்.

சங்குமுகம் பீச்:

இதே போல திருவனந்தபுரத்தில் இருந்து சுமார் 8 கி.மீ தொலைவில் உள்ள சங்குமுகம் பீச்சும் பிரபலம். இதன் அருகிலேயே திருவனந்தபுரம் விமானநிலையமும் அமைந்துள்ளது சிறப்பு. சங்குமுகம் பீச்சுக்கு சூரியன் மறையும் காட்சியை ரசிப்பதற்காகவே ஏராளமானோர் வருகின்றனர்.
வர்க்கலா பீச்:

திருவனந்தபுரத்தில் இருந்து 42 கி.மீ தொலைவில் உள்ளது வர்க்கலா பீச். இங்கு சுமார் 2 ஆயிரம் ஆண்டு பழமையான ஜனார்த்தனசுவாமி கோவிலும் அமைந்துள்ளது.

இவற்றைப்போல கேரளாவின் 2வது பெரிய சிகரமான அகஸ்தியர் கூடம், ஆங்கிலேயர் தங்களது வாணிபத்துக்காக மலபார் பகுதியில் முதல் முறையாக கட்டிய அஞ்சுன்தெங்கு கோட்டை என பார்க்கவேண்டிய இடங்களின் பட்டியல் நீளுகிறது.

Sunday, August 21, 2011

தியாகராஜர் இன்ஜி., கல்லூரியில் 702 மாணவர்கள் தேர்வு :: 702 selected in Thiyagaraja college

மதுரை : மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் டி.சி.எஸ்., நிறுவனம் நடத்திய வேலை வாய்ப்பு முகாமில், 702 பேர் தேர்வு பெற்றனர்.
டி.சி.எஸ்., அதிகாரிகள் கணேசன், தாமஸ், அசோக் சீத்தாராமன், ராம்குமார் மூன்று நாட்களாக பல்வேறு தேர்வுகள் நடத்தி மாணவர்களை தேர்வு செய்தனர். இறுதியாண்டு பயிலும் 840 மாணவர்கள் பங்கேற்றனர். இதுகுறித்து கல்லூரி முதல்வர் அபய்குமார், வேலைவாய்ப்பு அலுவலர் ராஜேஷ் கூறுகையில்,""கடந்தாண்டு 612 பேர் தேர்வு பெற்றனர். தமிழகத்தில் ஒரே கல்லூரியைச் சேர்ந்த 702 பேர் டி.சி.எஸ்., நிறுவனத்தில் தேர்வு பெற்றது, இதுவே முதல் முறை. ஓராண்டுக்கு மூன்றரை லட்சம் ரூபாய் வரை சம்பளம் கிடைக்கும். எங்கள் மாணவர்கள் சரியான இலக்கை நோக்கி செல்வது பெருமையாக உள்ளது,'' என்றனர். தேர்வு பெற்றவர்களை தாளாளர் கருமுத்து கண்ணன் பாராட்டினார்.

Friday, August 19, 2011

infosys Mysore Campus

infosys MysoRe Campus

Infosys Mysore Campus
Add caption
Infosys Mysore Campus
Infosys Mysore Campus






Thursday, August 18, 2011

குண்டானவர்கள் இளைக்க !::How to Loss weight !

மலை மீது சில நாள் தங்கினால் குண்டானவர்கள் இளைக்கலாம் . பசி குறைந்து , கலோரி கரையும் . ஆய்வு முடிவில் தகவல் .
உடம்பைக் குறைப்பதற்கான எல்லா வழிகளையும் ஒரு கை பார்த்து விட்டு , மூச்சு வாங்க பின்வாங்கிய குண்டானவரா நீங்க , உட்காராதீங்க , நேராக மலையை நோக்கி நடங்க . உச்சி மீது சில நாட்கள் தங்கினால் வேறெந்த உதவியும் இன்றி ஒல்லியாகி விடுவீர்கள் . இதை ஜெர்மனியில் நடந்த ஆய்வு முடிவு தெரிவிக்கிறது .
கடல் மட்டத்தில் இருந்து உயர்ந்த பகுதிக்குச் செல்லும்போது காற்றில் மாற்றம் ஏற்படும் . மெல்லிய காற்று மேலே தொடர்ந்து படுவதால் பசி குறைந்து விடும்

Tuesday, August 16, 2011

உங்கள் புகைப்படங்கள் இணையத்தில் எங்கெங்கு உள்ளன என்று கண்டறிய


இணைய உலகில் புகைப்படங்கள் பலவகையில் பரவிக்கிடக்கின்றன. பொதுவான படம் என்று இருந்துவிட்டால் பரவயில்லை. ஆனால் ஒருவரின் அந்தரங்கப்படங்கள் (Personal photos) வெளியானால் என்னாவது? சில நேரம் குடும்பப் புகைப்படங்கள் கூட மோசமாக சித்தரிக்கப்படுகிறது. மேலும் நீங்கள் புகைப்படத்துறையில் இருப்பவரெனின் எடுக்கும் புகைப்படங்களுக்கு நீங்கள் மட்டுமே அதன் சொந்தக்காரராக இருப்பீர்கள். உங்கள் புகைப்படத்தில் காப்பிரைட் (copyright and watermark ) போன்று எதாவது வாசகத்துடன் அதை இணையத்தில் வெளியிட்டு இருப்பீர்கள்.ஆனால் அது இணையத்திலேயே பல இடங்களில் பல பேரால் நகல் எடுக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு கொண்டிருக்கும். இதையெல்லாம் எப்படி கண்டறிவது? இதற்கு தான் TinEye என்று ஒரு புதுமையான இணையதளம் உள்ளது. உங்களின் அனுமதி இல்லாமலே உங்களின் புகைப்படங்கள் இணையத்தில் எங்கெங்கு உள்ளளன என்று விரைவாக தேடித்தரும். உங்களுக்கு வேண்டிய புகைப்படத்தின் இணைப்பு கொடுத்ததும் அல்லது உங்கள் கணிப்பொறியில் இருந்து அப்லோட் (upload) செய்தும் தேடலாம். இத்தளம் உங்களின் புகைப்படத்தின் டிஜிட்டல் தன்மையை (digital signature) புரிந்து கொண்டு தேடுகிறது.
இதன் மூலம் தேடுபொறிகளில் கூட கண்டுபிடிக்கமுடியாத ஒளிப்படங்களை வினாடிகளில் கண்டுபிடித்து தரும். மேலும் உங்கள் புகைப்படங்களை சிறிது மாற்றம் செய்து பயன்படுத்திருந்தாலும் கண்டுபிடித்துவிடும். இது இலவச சேவை தான். இதனை வலை உலவிகளில் நீட்சியாகவும் (addon IE/firefox) பயன்படுத்தி எளிதாக தேடலாம். எந்த புகைப்படத்தையும் இணையத்தில் பகிர்ந்து கொள்ளாதவர்களும் எதாவது இணையத்தில் தரவிறக்கிய படங்களையும் தேடலாம். முடிவுகள் எந்தெந்த இணையதளங்களில் காணப்படுகிறது என்று அறியலாம். இணையதள முகவரி : http://www.tineye.com/

Monday, August 15, 2011

65-வது சுதந்திர தினம் இந்தியாவின் வல்லரசு கனவா...நனவா...


உலகின் பெரிய ஜனநாயக நாடாக இந்தியாஇருக்கிறது. விண்வெளி, மருத்துவம், கல்வி, பொருளாதாரம், ராணுவம், அணு சக்தி உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் உலகளவில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைஎட்டியுள்ளது.

ஆனால் வல்லரசு நாடாக உருவாவதற்கு இன்னும் சில ஆண்டுகள் ஆகும். ஏனெனில் வல்லரசாக வேண்டுமெனில் பல்வேறு துறைகளில் நாம் மேலும் வளர்ச்சியடைய வேண்டும். உலகில் தற்போதுஅமெரிக்கா வல்லரசு நாடாக விளங்குகிறது. சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் இந்த நூற்றாண்டில் வல்லரசு நாடாக உருவாகும் என கணிக்கப்பட்டுள்ளது. வல்லரசு நாடு என்பது உள்நாட்டிலும், உலக நாடுகள் மத்தியிலும் செல்வாக்கைநிலைநிறுத்தும் தகுதியை பெற்றிருக்க வேண்டும். உலகின் எப்பகுதியிலும் தனது ஆதிக்கத்தை பயன்படுத்தும் அளவுக்கு ஆதிக்கம் மிக்கதாக இருக்க வேண்டும்.

நமது ராணுவம் உலகில்இரண்டாவது இடத்திலும், விமானப்படைநான்காவது இடத்திலும், கடற்படை மூன்றாவது இடத்திலும் உள்ளது. இந்திய வியாபார நிறுவனங்கள், வெளிநாடுகளில் கிளைகளை கொண்டுள்ளன. சாப்ட்வேர் துறை ஏற்றுமதியில் இந்தியாவின் பங்கு குறிப்பிடத்தக்க அளவில் வளர்ச்சியடைந்துள்ளது. இந்தியர்கள் உலகில் அனைத்துபகுதிகளிலும் வாழ்கின்றனர்.

இந்தியா சுதந்திரம் பெற்று 65 ஆண்டுகள்ஆகிவிட்டன. இந்த ஆண்டுகளில் இந்தியா வல்லரசாக முடியவில்லை. இதற்கு பலகாரணங்கள் உள்ளன. இருந்தாலும் வல்லரசு ஆவதற்கு இன்னும் அதிக தூரம் பயணம் செய்ய வேண்டும். இந்தியா 2020ம் ஆண்டுக்குள் வல்லரசாகும் என்பது நாட்டின் முன்னாள் ஜனாதிபதிஅப்துல்கலாம் அவர்களின் கருத்து. இவரது கூற்று நிறைவேறுமா என்று பார்த்தால் இருவேறு கருத்துகள் நிலவுகின்றன. ஒருசாரார் கண்டிப்பாக முடியும் எனவும், இன்னும் அதிக ஆண்டுகள் ஆகும் எனவும் கருதுகின்றனர். நாடு வல்லரசாக வேண்டுமெனில், இதற்கான பொறுப்பு மாணவர்கள், இளைஞர்கள் மட்டுமல்லாது, அனைவரிடமும் உள்ளது.

Friday, August 12, 2011

தமிழ் சினிமாவும் காப்பியும்::Tamil cinema and copies::karungalis

\
----------

இந்த காப்பியை தெரியதவர்களுக்கு மட்டும். :))))

Original Copy

I am Sam

i am sam Tamil Deiva Thirumagal Deiva Thirumagal Movie Copy Cat I am Sam

clip_image001 clip_image002

Original Copy

clip_image003clip_image004

Original Copy

clip_image005 clip_image006

Original Copy

clip_image007clip_image008

Original Copy

clip_image009clip_image010

Original Copy

clip_image011clip_image012

Original Copy

clip_image013clip_image014

Original Copy

clip_image015clip_image016

Original Copy

clip_image017clip_image018

Original Copy

clip_image019clip_image020

Original Copy

clip_image021clip_image022

Original Copy

clip_image023clip_image024

Original Copy

clip_image025clip_image026

Original Copy

clip_image027clip_image028

Original Copy

clip_image029clip_image030

Original Copy

clip_image031clip_image032

Original Copy

clip_image033clip_image034

Original Copy

clip_image035clip_image036